Advertisment

மேற்கு வங்க கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு வங்க கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu CM M K Stalin telephonic talked to West Bengal Governor Ila Ganesan about his health condition

மேற்கு வங்கம், மணிப்பூர் கவர்னர் இல. கணேசன்

மேற்கு வங்க கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க கவர்னர் இல. கணேசன், சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (அக்.1) ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பேஸ்புக் சமூக வலைதளத்தில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் பூரண நலம்பெற எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment