scorecardresearch

ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த் பங்கேற்ற இல.கணேசன் இல்ல விழா போட்டோஸ்

பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், செண்டை மேளம் வைத்து பிரம்மாண்டமக கொண்டாடப்பட்டது.

ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த் பங்கேற்ற இல.கணேசன் இல்ல விழா போட்டோஸ்

மேற்கு வங்க ஆளுனர் இல.கனேசனின் சகோதரர் பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அவரின் 80-வது பிறந்த நாளான இந்த நாளை சதாபிஷேக விழாவாக இல.கனேசன் குடும்பத்தினர் கொண்டாடினர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், செண்டை மேளம் வைத்து பிரம்மாண்டமக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கினார். தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளக்காரர்களுடன் இணைந்து மேளம் இசைத்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: West bengal governor ila ganesan brother birthday photo gallery

Best of Express