மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், பதிலுக்கு ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஜக்தீப் தன்கர் அம்மாநில் ஆளுநராக பொறுப்பேற்றத்தில் இருந்து அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்தார்.
மேற்கு வங்காள ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை முடக்கி வைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் அடையாளர் ரீதியான தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது.” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், ஸ்டாலினின் அவதானிப்புகளில் உண்மை இல்லை என பதில் அளித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜக்தீப் அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, அரசு கேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவையை முடித்து வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”