’மேற்கத்திய தத்துவங்களால் நாம் பிரிக்கப்பட்டோம்': ஆளுநர் ரவி

இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன்பாக வித்தியாசமான சமூக அடையாளங்கள் கொண்ட மக்கள் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் வாழந்து வந்ததாகவும், அதை ஒரு ராஷ்டியம் என்று அழைக்கலாம் என்றும், மேற்கத்திய தத்துவங்களால்தான் நாம் மாநில வாரியாக பிரிக்கப்பட்டோம் என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஆளுநர் ரவி

Advertisment

பாஜகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயா குறித்த புத்தக வெளியீடு,  சென்னை மயிலாப்பூரில் உள்ள தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்றது.  இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் ரவி பேசியதாவது, “தமிழகத்தில் உள்ள  தெலுங்கு, மலையாளம்  பேசும் மக்கள் தங்களை புலம்பெயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் 300 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தவர்கள். பல்லாயிரக் கணக்கான சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்களும், லட்சக்கணக்கான மரத்தியர்களுக்கும் எந்த வேறுபாடுகள் மற்றும் தடைகளும் இல்லை. ஒரு இடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு எளிதாக சென்றார்கள். 100 வருடங்களுக்கு  முன்பு ஒரு ராஷ்டியமாக இருந்தது. மேற்கத்திய தத்துவங்களால்தான் மாநிலம் என்ற பிரிவினை வந்தது.

 வெளிநாட்டவர்களால் மாநிலம் மற்றும் அதன் உரிமைகள் என்ற வாதம் உருவானது. யார் அதிகமாக உள்ளனர் என்பதை வைத்துதான் உரிமைகள் வகுக்கப்படுகிறது. இந்த கணக்குகள் அடையாளத்தை வைத்துதான் உருவாக்கப்படுகின்றன. வேறுபாடுகளை வைத்துதான் அடையாளங்கள் உருவாக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் “ நாம் வேறுபாடுகளை உற்று நோக்கினால் மட்டுமே வேறுபாடுகள் தெரியும். நான் நாகாலாந்தில் இருந்தபோது, அங்கே 16 பழங்குடி இனங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நீங்கள் அங்கே சென்று ஆழமாக ஆராய்ந்தால் அங்கிருக்கும் பழங்குடியின சமூகத்தில் 30  உற்பிரிவுகள் உள்ளது. யாரும் மற்றவர்களிடம்  பேச்சு வார்த்தையில் இல்லை. நாம் வேறுபாடுகளை பார்க்கத் தொடங்கினால் நாம் அனைவரும்  வித்தியாசமானவர்கள்தான். இதன் விளைவாக உலகம் முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. கால நிலை மாற்றம், போர் மற்றும் கண்ணுக்குத் தெரியாத போர்கள், வறுமை, நம்மை அழிக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை பெருக்கம் என்று சமநிலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய தத்துவங்களால்தான் மக்கள் மற்றும் சமூகம் பிரிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: