அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபி.எஸ் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பேசியது என்ன என்பதுதான் அரசியலில் ஆர்வம் உள்ள பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள விஷயமாக உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் செவ்வாய்கிழமை சுமார் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். சசிகலா அதிமுகவை மீட்க முயற்சி செய்வது தொடர்பாக அமமுக தலைவர் டி.டி.வி தினகரன் கூறுகையில், “முன்னாள் முதல்வர் அம்மாகிட்ட (ஜெயலலிதா) இருந்த அதே துணிச்சலுடன் தனது சித்தி சசிகலாவும் அதிமுகவை மீட்க போராடி வருகிறார். அது எங்கள் இரத்தத்திலேயே இருக்கிறது” என்று கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, அதிமுகவில் சலசலப்பு எழுந்தது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையேயான முதல் சந்திப்பு நடந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், இரண்டு தலைவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் இருந்தனர்.
இந்த 20 நிமிட சந்திப்பில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “அதிமுக தலைவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட ஒரு சுமூகமான சந்திப்பு இது. சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தோ, தேனி மாவட்ட அதிமுகவில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்தோ இருவரும் பேசவில்லை. முன்னாள் அமைச்சரும், கட்சியின் வழிநடத்தல் குழு உறுப்பினருமான டி.ஜெயக்குமாரின் ஜாமீன் மனு குறித்து பேசப்பட்டது” என்று தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை அன்று மதுரை விமான நிலையத்தில் சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் “அய்யோ சாமி” என்று கூறி தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.பி.எஸ். ஆதரவாளர்களின் தலைமையில் செயல்படும் மாவட்ட நிர்வாகிகல், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க, பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என இ.பி.எஸ் முகாமில் இருந்து தேனி மாவட்ட அதிமுகவுக்கு தெரிவித்தது. இதையடுத்து, மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருந்த தேனி மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த வாரம் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கையெழுத்திட்ட அறிக்கையில், தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்ததற்காக 40 நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை சசிகலாவைச் சந்தித்த ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவும் கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டார். மேலும், சசிகலாவும், தினகரனும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய ஓ.பி.எஸ் விசுவாசியான அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் மீது அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை.
பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்ததற்காக 40 அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக கடந்த வாரம் ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர். திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை சசிகலாவைச் சந்தித்த ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.