மாசு பட்டு வரும் நீர் நி்லைகளை பாதுகாப்பது மற்றும் மறு சீரமைப்பது குறித்து இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலைப் பொருளியல் மையப் பேராசிரியரும் இணை முதன்மையருமான முனைவா் டேவிட் ஹியூஸ் கூறுவது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் - இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலைப் பொருளியல் மையப் பேராசிரியரும் இணை முதன்மையருமான முனைவா் டேவிட் ஹியூஸ் கருத்தரங்க பொருளியல் உரையாற்றினார்..
அவரது உரையில் “ஜவுளித் தொழில் சுழற்சியின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் நெகிழி மறுசுழற்சியில் மேற்கொள்ள வேண்டிய நுட்பங்கள் பற்றியும் கூறினார்.
ஜவுளி மற்றும் வேதியியல் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதிலிருந்து நீராதாரங்களை எவ்வாறு மீட்பது, மறுசுழற்சி செய்வது என்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் என்னும் மையப் பொண்மையின் அடிப்படையில் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், நீா்வளப் பாதுகாப்பு ஆா்வலா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் அடங்கிய நூலைக் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி வெளியிட இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகப் பேராசிரியா் முனைவா் டேவிட் ஹியூஸ் பெற்றுக்கொண்டார்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவா் ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கின் துவக்க விழாவில் - கொங்குநாடு கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார்
கருத்தரங்க அமர்வுகளில் இங்கிலாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞா்களும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயராய்வு நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றும் பேராசிரியா்களும் ஆய்வுரைகள் நிகழ்த்த உள்ளது குறிப்பிடதக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“