Advertisment

தவறான சிகிச்சை; கால்கள் அகற்றம்: சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் நடந்தது என்ன?

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: இன்று மாலை பிரியா உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil news

Tamil news updates

priya chennai football player died Tamil News - தமிழ்நாடு: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மாணவி பிரியா (17 வயது). சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைந்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

Advertisment

தவறான சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை

publive-image

இந்நிலையில், மாணவி பிரியாவுக்கு சமீபத்தில் பயிற்சியின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் மாணவி பிரியா.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கான அறுவை சிகிச்சையையும் செய்துள்ளனர். ஆனால், பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிரியாவின் கால்கள் அகற்றம்

இந்நிலையில், மாணவி பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அதன்பின் அவர் ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவமனை இருக்கும் பகுதி முழுவதும் பரபரப்படைந்த நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

publive-image

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வலதுகால் மூட்டு சவ்வு பிரச்சனை காரணமாக கடந்த நவம்பர் 7 ஆம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாணவிக்கு ஆர்த்ரோஸ்கோபி (Arthroscopy) சிகிச்சையை அதிநவீன தொழில்நுட்ப வாயிலாக வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்துள்ளனர். இருப்பினும், மருத்துவர்களின் கவனக்குறைவால், ரத்த பெருக்கத்தை தடுக்க 'compression bandage' போடப்பட்டது. compression bandage அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து, வலி உள்ள காரணத்தினால் 8 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாணவி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 மூத்த நிபுணர்கள் மாணவிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று (நவம்பர் 14 ஆம் தேதி) நள்ளிரவுக்கு மேல் சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு என தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலை 7:15 மணிக்கு மாணவி உயிரிழந்தார்.

publive-image

அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். மருத்துவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு." என்று தெரிவித்தார்.

மருத்துவத்துறை விளக்கம்

இந்நிலையில், மாணவி பிரியா உயிரிழப்பு குறித்து மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளது. அதில், பிரியாவின் காலில் இறுக்கமாக கட்டு போட்டிருந்ததால், தசை கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதில் இருந்து மயோக்ளோனஸ் என்ற திரவம் வெளியேற முடியாமல் அந்த திரவம் ரத்தத்துடன் கலந்து சிறுநீரகத்தை செயலிழக்கவைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்து இறுதியாக உயிரிழப்பு நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என பதிவு செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில், கவனக்குறைவாக பணியாற்றிய மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

பிரியா உடலுக்கு இறுதி சடங்கு

மாணவி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், பிரியாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த உறவினர்கள், நண்பர்கள், மரணத்துக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய கோரி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின் உயிரிழந்த பிரியாவின் உடலை எடுத்துச் செல்ல போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது சென்னை, வியாசர்பாடியில் பிரியாவின் வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை பிரியா உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.

பிரியாவின் தந்தை பேட்டி

publive-image

இந்நிலையில், உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரியாவுக்கு ஜவ்வுதான் கிழிந்துள்ளது. பெரிய மருத்துவமனை தேவையில்லை என கூறினார்கள். ஆனால், அவர் உயிரிழப்பார் என என நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிரியா இறப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார்.

பிரியாவின் பயிற்சியாளர் பேட்டி

இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் பிரியா. அவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பயிற்சியாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Tamilnadu Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment