2024க்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடிடுகிறது. மீதமுள்ள தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 பேரில், 11 பேர் புதிய முகங்கள் ஆவார்கள். மேலும், பட்டியலில் 3 பெண்கள், 2 மருத்துவர்கள், 6 வழக்கறிஞர்கள் உள்ளனர்.
2024 மக்களவை தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
1) வட சென்னை: கலாநிதி வீராசாமி
2) தென் சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன்
3) மத்திய சென்னை: தயாநிதி மாறன்
4) ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு
5) காஞ்சிபுரம்: செல்வம்
6) அரக்கோணம்: ஜகத்ரக்ஷகன்
7) வேலூர்: கதிர் ஆனந்த்
8) தர்மபுரி: ஏ மணி
9) திருவண்ணாமலை: சி.என்.அண்ணாதுரை
10) ஆரணி: தரணிவேந்தன்
11) களக்குறிச்சி: மலையரசன்
12) ஈரோடு: கே.இ.பிரகாஷ்
13) நீலகிரி: ஆ ராசா
14) கோவை: கணபதி ராஜ்குமார்
15) பொள்ளாச்சி: கே ஈஸ்வரசாமி
16) தஞ்சாவூர்: எஸ் முரசொலி
17) தேனி: தங்க தமிழ்செல்வன்
18) தூத்துக்குடி: கனிமொழி கருணாநிதி
19) தென்காசி: ராணி
20) காஞ்சிபுரம் (எஸ்சி): கே செல்வம்
21) பெரம்பலூர்: அருண் நேரு
இவர்களில் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, கதிர் ஆனந்த், அருண் நேரு ஆகியோர் ஸ்டார் வேட்பாளர்களாக உள்ளனர்.
மத்திய சென்னை மக்களவை தொகுதி
சென்னை சென்ட்ரல் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இது இந்தியாவின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும், உலகின் 31 வது பெரிய நகர்ப்புறமாகவும் உள்ளது.
வங்காள விரிகுடாவில் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் இந்தியாவின் மிகச்சிறிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த மக்கள் தொகை 1,631,196 ஆகும்.
2009 மக்களவை தொகுதி
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
திமுக | தயாநிதி மாறன் | 285,783 | 46.83% |
அதிமுக | முகம்மது அலி ஜின்னா | 2,52,329 | 41.35% |
தேமுதிக | ராமகிருஷ்ணன் | 38,959 | 6.38% |
மனிதநேய மக்கள் கட்சி | ஹைதர் அலி | 13,160 | 2.16% |
பட்டியல் சாதியினர் (SC) மக்கள் தொகை 17.84% ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) 0.29% ஆகவும் உள்ளனர். தமிழ்நாட்டின் சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது.
ஆனால், 2014ல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) எஸ்.ஆர்.விஜயகுமார் முதல்முறையாக வெற்றி பெற்றார்.
2014 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
அ.தி.மு.க | விஜயகுமார் | 333,296 | 42.03% |
தி.மு.க | தயாநிதி மாறன் | 2,87,455 | 36.25% |
தே.மு.தி.க (பா.ஜனதா கூட்டணி) | கான்ஸ்டைன் ரவீந்திரன் | 1,14,798 | 14.48% |
காங்கிரஸ் | மெய்யப்பன் | 25,981 | 3.28% |
சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர்-எஸ்சி, துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குகள் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றங்கள் உள்ளன. இந்த தொகுதியில் ஆரம்பம் முதலே மாறன் குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
1977 முதல் 2014 வரை, பதினொரு மக்களவைத் தேர்தல்கள் இங்கு நடைபெற்றன, திமுக ஏழு முறையும், காங்கிரஸ் மூன்று முறையும் வெற்றி பெற்றன. ஆனால், 2014ல் அதிமுகவின் எஸ்.ஆர்.விஜயகுமார், திமுக மூத்த தலைவர் தயாநிதி மாறனை 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக தொகுதியைக் கைப்பற்றினார்.
2019 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க | தயாநிதி மாறன் | 448,911 | 57.36% |
பா.ம.க (பா.ஜனதா கூட்டணி) | சாம் பால் | 92,249 | 18.83% |
ம.நீ.ம | கமீலா நாசர் | 92,249 | 11.79% |
நாம் தமிழர் | கார்த்திகேயன் | 30,886 | 3.95% |
2014ல் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.விஜயகுமார் 13,28,027 வாக்குகளில் 3,33,296 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைவர் தயாநிதி மாறன் 287,455 வாக்குகளும் பெற்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 25,981 வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சி (AAP) 19,553 வாக்குகளும், நோட்டா 21,959 வாக்குகளும் பெற்றன. இத்தொகுதியில் மொத்தம் 61.39% வாக்குகள் பதிவாகின.
2019 மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,48,911 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர், வரலாற்று ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதிக்கத்தில் உள்ளது.
அதன் தொடக்கத் தேர்தலில் திமுக மூத்தத் தலைவர் பி.சிவசங்கரன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
2009 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க. | டி.ஆர். பாலு | 352,641 | 44.44% |
பா.ம.க. | ஏ.கே மூர்த்தி | 3,27,605 | 41.28% |
தே.மு.தி.க | அருண் சுப்பிரமணியன் | 84,530 | 10.65% |
1967 இல் நிறுவப்பட்டதிலிருந்து, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி 12 மக்களவைத் தேர்தல்களைக் கண்டுள்ளது. இதில், திமுக ஆறு முறையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மூன்று முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தை நினைவுகூரும் வகையில் ராஜீவ் காந்தி நினைவிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
2014 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
அ.தி.மு.க | கே.என். ராமச்சந்திரன் | 545,820 | 43.35% |
தி.மு.க | டி.ஆர். பாலு | 4,43,174 | 35.20% |
ம.தி.மு.க (பா.ஜனதா கூட்டணி) | மாசில்லாமணி | 1,87,094 | 14.86% |
காங்கிரஸ் | அருள் அன்பரசு | 39,015 | 3.10% |
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த மக்கள் தொகை 2,387,412 ஆகும்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
2019 மக்களவைத் தேர்தலில், திமுகவின் டிஆர் பாலு 793,281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.கவின் வைத்திலிங்கம் 285,326 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
2019 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்குவாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க | டி.ஆர். பாலு | 793,281 | 56.53% |
பா.ம.க | வைத்திலிங்கம் | 2,85,326 | 20.33% |
மக்கள் நீதி மய்யம் | ஸ்ரீதர் | 1,35,525 | 9.66% |
நாம் தமிழர் | மகேந்திரன் | 84,979 | 6.06% |
2014ல் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 102,646 வாக்குகள் வித்தியாசத்தில் 5,45,820 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுக தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் 443,174 வாக்குகள் பெற்றார்.
வேலுர் மக்களவை தொகுதி
வேலூர், 2019 மக்களவைத் தேர்தலின் போது, தி.மு.க வேட்பாளரின் அலுவலகத்தில் இருந்து கணிசமான அளவு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதால் தலைப்பு செய்தி ஆனது.
2009 மக்களவை தேர்தல்அm
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க. | அப்துல் ரகுமான் | 360,474 | 49.84% |
அ.தி.மு.க | வாசு | 2,53,081 | 34.99% |
தே.மு.தி.க | சௌகத் அலி | 62,696 | 8.67% |
பா.ஜனதா | ராஜேந்திரன் | 11,184 | 1.55% |
இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற சூழ்நிலையில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட முதல் முறையாகும்.
கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
2014 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
அ.தி.மு.க | செங்குட்டுவன் | 383,719 | 39.35% |
பா.ஜனதா | ஏ.சி. சண்முகம் | 3,24,326 | 33.26% |
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (தி.மு.க கூட்டணி) | அப்துல் ரகுமான் | 2,05,896 | 21.11% |
காங்கிரஸ் | விஜய் இளஞ்செழியன் | 21,650 | 2.22% |
இந்த முடிவுக்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வேலூர் மக்கள் தொகை 504,079 ஆகும்.
இங்கு, 2014 மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பி செங்குட்டுவன் 383,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க | கதிர் ஆனந்த் | 485,340 | 47.21% |
அ.தி.மு.க (பா.ஜ.க கூட்டணி) | ஏ.சி சண்முகம் | 4,77,199 | 46.42% |
நாம் தமிழர் கட்சி | தீப லட்சுமி | 26,995 | 2.63% |
நோட்டா | நோட்டா | 9,417 | 0.92% |
அவர் 324,326 வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் (BJP) ஏ.சி சண்முகத்தையும், 205,896 வாக்குகளைப் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (IUML) அப்துல் ரஹ்மானையும் தோற்கடித்தார்.
நீலகிரி மக்களவை தொகுதி
நீலகிரி மாவட்டம், கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இது, மலை நிலப்பரப்புக்கு புகழ்பெற்றது.
2009 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க | ஆ. ராசா | 316,802 | 44.67% |
ம.தி.மு.க | கிருஷ்ணன் | 2,30,781 | 32.54% |
தே.மு.தி.க | செல்வராஜ் | 76,613 | 10.80% |
கொ.ம.தே.க. | பத்திரன் | 32,776 | 4.62% |
மேலும், தோட்டக்கலை மற்றும் சுற்றுலா மையமாக செயல்படுகிறது. 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பவானிசாகர் (SC), உதகமண்டலம், கூடலூர் (SC), குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி (SC) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
2014 மக்களவை தொகுதி
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
அ.தி.மு.க | கோபால கிருஷ்ணன் | 463,700 | 52.31% |
தி.மு.க. | ஆ. ராசா | 3,58,760 | 40.47% |
நோட்டா | நோட்டா | 46,559 | 5.25% |
காங்கிரஸ் | காந்தி | 37,702 | 4.25% |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் 735,394 மக்கள் தொகை உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 547,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தொகுதி
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க. | ஆ. ராசா | 547,832 | 54.36% |
அ.தி.மு.க. | தியாகராஜன் | 3,42,009 | 33.94% |
மக்கள் நீதி மய்யம் | ராஜேந்திரன் | 41,169 | 4.09% |
சுயேச்சை | ராமசாமி | 40,419 | 4.01% |
அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 342,009 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதேபோல், 2014 தேர்தலில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் நீலகிரி தொகுதியில் 463,700 வாக்குகள் பெற்று, திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜாவை 104,940 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
2009 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க. | ஜெயதுரை | 311,017 | 47.40 |
அ.தி.மு.க | சிந்தியா பாண்டியன் | 234,368 | 35.72 |
தே.மு.தி.க | சுந்தர் | 61,403 | 9.36 |
பா.ஜனதா | சரவணன் | 27,013 | 4.12 |
இதில் 4 இடங்களை அதிமுகவும், 2 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன. 1,310,406 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், 49.7% ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில், 50.3 சதவீதத்துடன் பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.
2014 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
அ.தி.மு.க. | ஜெயசிங் தியாகராஜன நாட்டர்ஜி | 366,052 | 39.92 |
தி.மு.க. | ஜெகன் | 242,050 | 26.40 |
ம.தி.மு.க (பா.ஜனதா கூட்டணி) | ஜோயல் | 182,191 | 19.87 |
காங்கிரஸ் | சண்முகம் | 63,080 | 6.88 |
2009 இல் நிறுவப்பட்ட தூத்துக்குடி இரண்டு மக்களவைத் தேர்தல்களைக் கண்டுள்ளது. 2009-ல் திமுகவின் எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்றார்.
2014-ல் அதிமுகவின் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 563,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தல்
கட்சி | வேட்பாளர் பெயர் | வாக்கு | சதவீதம் (%) |
தி.மு.க | கனிமொழி | 563,143 | 56.77 |
பா.ஜனதா | தமிழிசை சௌந்தரராஜன் | 215,934 | 21.77 |
அ.ம.மு.க | புவனேஸ்வரன் | 76,866 | 7.75 |
நாம் தமிழர் | கிறிஸ்டைன் ராஜசேகர் | 49,222 | 4.96 |
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 215,934 வாக்குகளும், அமமுக வேட்பாளர் எம் புவனேஷ்வரன் 76,866 வாக்குகளும் பெற்றனர்.
2014 தேர்தலில், அதிமுகவின் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி 366,052 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுகவின் பி ஜெகன் 242,050 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.