What is Red alert for Tamilnadu Tamil News : நவம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை மற்றும் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD). வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரத்தில் 204.4 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் குறிப்பிடுகிறது. ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலெர்ட் என்றால் என்ன? இது இதனைக் குறிக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்...
நிறங்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, எதிர்பார்க்கப்படும் வானிலை நிகழ்வுகளின் தீவிரத்தை வெளிக்கொணர வானிலை எச்சரிக்கைகளில் வண்ணக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வானிலையின் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை முன்கூட்டியே எச்சரிப்பது மிகவும் அவசியம்.
அந்த வரிசையில் அடிப்படை மட்டத்தில் வானிலையைக் குறிக்கப் பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு என நான்கு வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. பச்சை- எந்த நடவடிக்கையும் தேவையில்லை; மஞ்சள்- ஆராய்ச்சியைப் புதுப்பித்த நிலையில் இருப்பது; ஆரஞ்சு - எதற்கும் தயாராக இருக்கவேண்டும் ; சிவப்பு - நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வண்ண முன்னறிவிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
5-நாள் முன்னறிவிப்பு திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வானிலை நிலைமைக்கு நிறத்தைத் தீர்மானிக்க, ஒரு குறிப்பிட்ட மேட்ரிக்ஸ் பின்பற்றப்படுகிறது. பாதிப்பு அடிப்படையிலான எச்சரிக்கைக்கான வண்ணக் குறியீடு தொடர்பான மதிப்பீட்டில் வானிலை காரணிகள், நீரியல் காரணிகள், புவி இயற்பியல் காரணிகள் போன்றவை அடங்கும். வானிலை அலுவலகம் எச்சரிக்கைக்குப் பொருத்தமான வண்ணக் குறியீட்டைத் தீர்மானிக்க இந்த எல்லா காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
நிறங்கள் எதைக் குறிக்கின்றன?
எந்த ஒரு கனமழைக்கும் வாய்ப்பில்லை என்றால் பச்சை நிறம் பயன்படுத்துவார்கள். ஏற்கனவே வெள்ளம் மற்றும் கனமழை எதிர்பார்க்கப்பட்டால் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறங்களைத் தாக்கத்திற்கு ஏற்ப எச்சரிக்கை செய்வார்கள். சிதறிய அல்லது தனிமைப்படுத்தப்பட்ட கனமான மழை பொழிவு இருந்தால் மஞ்சள் எனக் குறிப்பிடப்பட வேண்டும். 3 நாட்களுக்குத் தொடர்ந்து கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் போது, முதல் இரண்டு நாள்களுக்கு ஆரஞ்சு வண்ணமும் 3-ம் நாள் சிவப்பு வண்ணமும் பயன்படுத்தப்படும். தனிமைப்படுத்தப்பட்ட மிக அதிக மழை அல்லது சிதறிய கனமழை முதல் மிக அதிக மழைக்கு, நிச்சயம் சிவப்பு நிறம். இவ்வாறு நிறங்களின் எச்சரிக்கை குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.