‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று கோஷமிட்டு தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா ஐபிசி 75 சட்டம் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த சட்டம் பற்றிய செய்தி தொகுப்பு இது.
சோபியா மீது பாய்ந்த ஐபிசி 75 சட்டம் :
கனடா நாட்டில், ஆராய்ச்சி மாணவராக பயின்றி வரும் லூயிஸ் சோபியா மாணவி நேற்று, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தனது தாயுடன் வந்தார். அப்போது அதே விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்தார்.
சோபியா
தமிழிசையை பார்த்தவுடன் விமானத்திலேயே, ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று கோஷமிட்டார். பின்னர் விமானம் தரையிறங்கிய பின்பும் அதே கோஷத்தை எழுப்பினார் சோபியா. இதனால் அவருக்கு தமிழிசைக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.
இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.
சோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
சோபியா கைது செய்யப்பட்ட ஐபிசி 75 சட்டம் பற்றி தெரியுமா?
- இந்த சட்டத்தின்படி, பொது இடத்தில் அமைதி காப்பதற்காக, மக்களுக்காக பணியாற்றுபவர்கள் தனது கடமையை செய்யும் போது, யாரேனும் ஒருவரை கேள்வி கேட்டால், பதில் கூறுபவர் கேள்வி கேட்பவரிடம் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும்.
- பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டால் இந்த சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது வழக்கு தொடரப்படும்.
- பொது இடத்தில் குடித்துவிட்டு பிரச்சனை செய்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள், தகாத வார்த்தைகளால் ஏசுவது போன்ற காரியங்களால் பொது அமைதியை சீர்குலைத்தால் இந்த சட்டத்தின் வழக்கு தொடர முடியும்.
- இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டால், அதிகபட்சமாக 6 மாத கால சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டத்தின் உள்ள விதிமுறை.