பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

14.1.2018 பொங்கல் பண்டிகையன்று காலை 6-7 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு வாய்ந்தது. தவிர 7-10, பகல் 12 -...

சரவணக்குமார்

சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில் தான் தை மாதம் பிறக்கும். அப்படி பார்த்தால், இந்த வருடம் மாலை 3.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைகிறார் சூரியன். இந்த நேரத்திலிருந்தே தை மாதம் ஆரம்பமாகிறது. ஆனால் இதன் பிறகு பொங்கல் வைத்து வழிபடக்கூடாது. ஏனென்றால் இது சூரியனின் அஸ்தமன நேரம். கதிரவன் உதிக்கும் பொழுதோ அல்லது உச்சிக்கு வரும் வேளையிலோ பொங்கலிட்டு படைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதன்படி 14.1.2018 பொங்கல் பண்டிகையன்று காலை 6-7 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு வாய்ந்தது. இதை தவிர 7-10 மணிக்குள்ளும், 12 மணியிலிருந்து 1 மணி வரையிலும் பொங்கல் பானை வைத்து வழிபடலாம்.

×Close
×Close