சென்னையில் 2ஆவது விமான நிலையத்துக்கு மத்திய அரசு தேர்வு செய்துள்ள பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த இரண்டு இடங்களும் சென்னையில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? இதற்கான பயண நேரம் எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரும் உள்ளது. இதில் பன்னூர் சென்னை விமான நிலையத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து தோராயமாக ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை ஆகலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பன்னூர் 56 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அங்கிருந்து பன்னூர் செல்ல 1 மணி நேரம் 45 நிமிடம் வரை ஆகலாம். சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியிலிருந்து 56 கி.மீ தொலைவில் பன்னூர் உள்ளது.
ஓவியத்தால் வறுமையை வென்ற சென்னை இளைஞர்!
இங்கிருந்து பன்னூர் செல்ல 1 மணி நேரம் 25 நிமிடம் ஆகலாம். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சென்னை விமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்கிருந்து பரந்தூர் செல்ல ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது. அங்கிருந்து பரந்தூர் செல்ல தோராயமாக 2 மணி நேரம் ஆகலாம். கிண்டியில் இருந்து பரந்தூர் 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து தோராயமாக 1 மணி நேரம் 45 நிமிடம் ஆகலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“