அண்ணாமலைக்கு அடுத்து என்ன பதவி? தமிழக பா.ஜ.க. எதிர்காலம் என்ன?

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
What next for Annamalai

அண்ணாமலைக்கு அடுத்து என்ன பதவி? தமிழக பா.ஜ.க. எதிர்காலம் என்ன?

நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்காக மாநில பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் (அ) தென்மாநிலங்களில் அவருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான அறிகுறிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்தன."அண்ணாமலையின் நிர்வாக திறன்களை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பா.ஜ.க பயன்படுத்தும்" என்று ஷா சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளிக்கிழமை கூறினார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அண்ணாமலை கட்சியின் தேசிய துணைத் தலைவர் (அ) பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார். "பின்பு அரசுப் பணியில் சேர்க்கப்படலாம்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகி கூறினார். தற்போதைக்கு மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கான திட்டம் எதுவும் இல்லை என்று சுட்டிகாட்டிய பா.ஜ.க மூத்த தலைவர், அண்ணாமலை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். 

தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் செல்வாக்கை அதிகரித்த பெருமை அண்ணாமலைக்கு உண்டு. 2019 மக்களவைத் தேர்தலில் 3% இருந்த பா.ஜ.க வாக்கு வங்கி, அ.தி.மு.க கூட்டணி இன்றி அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ.க கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 11% க்கும் அதிகமாக உயர்ந்தது. பா.ஜ.க தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் அண்ணாமலை பிடிவாதமாக உள்ளார். ஆனால் இந்த நடவடிக்கை அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு பலனளிக்காது என்பதை தேசிய தலைமை உணர்ந்தது" என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.

Advertisment
Advertisements

மற்றொரு பா.ஜ.க தலைவர் கூறுகையில், கேரளாவில் வரவிருக்கும் தேர்தல்களில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பார். மேலும் தெற்கில் நட்சத்திர பிரச்சாரகர்களில் ஒருவராக இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார். அண்ணாமலையும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு குறைவு என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

BJP Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: