அதிமுகவில் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காதபோதே கேள்விகள் எழுந்தன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் 33 அமைச்சர்களில் 3 அமைச்சர்களுகுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதில் நிலோபர் கபிலும் ஒவருர். இவர் வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்று தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. இருப்பினும், வாணியம்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமலு வெற்றிபெற்றதால் அதிமுகவில் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மே 24ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நிலோபர் கபில், “அதிமுகவில் என்னை நீக்கியதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணிதான் காரணம்” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். மேலும், தொகுதியில் தனக்கு தக்க மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அதனால், ஏற்கெனவே கட்சியில் இருந்து விலகுவதாக தனது உறவினர் மூலம் தலைமைக்கு கடிதம் அளித்ததாகவும் கூறினார். கொரோனா தொற்றால், தனது அம்மாவும் சகோதரியும் இறந்துவிட்டார்கள். அப்போது, மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி ஆறுதல் கூட சொல்லவில்லை. ஆனால், திமுக மாவட்ட செயலாளர் தேவராஜி போனில் விசாரித்து ஆறுதல் கூறினார். நான் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என்று கூறிய நிலோபர் கபில் கே.சி.வீரமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார்.
தொடர்ந்து பேசிய கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்குப் பண மோசடிப் புகார்தான் காரணம் என்றால், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடிப் புகார்கள் இருக்கின்றன. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும்கூட ஊழல் புகார ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் கொடுத்திருக்கிறார் என்று தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை பொதுவெளியில் கேள்விகளாக எழுப்பினார். அப்போது, அவர் திமுகவில் இணைவதாக பேச்சு எழுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு விரைவில் தான் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதைப் பற்றி அறிவிப்பதாகக் கூறினார்.
அதிமுகவில் இருந்து தன்னை எந்த விசாரணையும் இன்றி நீக்கியதற்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிதான் காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி, அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கபட்டது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து திருப்பத்தூரில் இன்று (ஜூன் 1) செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி, “நிலோபர் கபில் மீதான ஊழல் புகார் எந்த அளவில் உண்மையென எனக்குத் தெரியவில்லை. அதை போலீஸ் பார்த்துக்கொள்ளும். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் கொடுக்காதபோதே நிலோபர் கபில் எதிர்ப்பாளராகிவிட்டார். நகருக்குள் இருக்கும் அவரின் வார்டில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு பூத்தில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு விழுந்திருக்கிறது. சில பூத்களில் 12, 16, 31 வாக்குகளே விழுந்துள்ளன. இதைவைத்து, நிலோபரின் செயல்பாடுகள் எப்படியிருந்திருக்கிறது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
நிலோபர் கபில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதி முழுவதையும் தன் சமூக மக்கள் வசிக்கும் நகரப் பகுதியிலேயே செலவழித்துவிட்டார். கிராம மக்களும் எதிர்ப்பார்க்கிறாங்க. அங்கேயும் எதையாவது செய்யுங்க நான் அப்போதே அவரிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. அந்த நேரத்தில், நிலோபர் கபில் நானும் அமைச்சர் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் சொல்வதைக் கேட்டிருந்தால் நல்லப் பெயர் எடுத்திருக்கலாம். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் நின்று ஜெயித்திருக்கலாம். வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்று நினைத்து தலைமை முடிவு செய்ததால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட அமைச்சராக இருந்ததால் என்னிடமும் கேட்டார்கள். வாணியம்பாடியில் நிலோபருக்கு வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக இல்லை என நானும் தலைமையிடம் சொன்னேன்.” என்று கூறினேன்.
தொடர்ந்து பேசிய கே.சி.வீரமணி, “அமைச்சர் பதவி மட்டும்தான் நிலோபரின் கண்ணுக்குத் தெரிந்தது. இதனால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கட்சியினரும் புறக்கணித்துவிட்டார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் தொண்டர்களிடம் வாங்க திமுகவுக்குப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கிறார். யாருமே போகவில்லை. தேர்தலுக்குப் பின் நிலோபர் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜியின் வீட்டுக்கே போய் சால்வைப் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்கும் போய் அவரைச் சந்தித்துள்ளார். பிறகு எப்படி அவரை கட்சியிலிருந்து எடுக்காமல் இருப்போம். நிலோபரின் குற்றச்சாட்டுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
2016 தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்க காரணமே நான்தான். ஏம்பா, உனக்கு வேற ஆள் கிடைக்கலையா? என்று அப்போதே அம்மா (ஜெயலலிதா) சொன்னார். நகரமன்ற தலைவராக இருந்திருக்கிறார். கொஞ்சம் வசதி வாய்ப்பும் இருக்கிறது. சீட் கொடுத்தால் செய்வார் என்று நான்தான் ரெக்கமென்ட் செய்தேன். நிலோபர் கபிலுக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் வாணியம்பாடி தொகுதியும் கைவிட்டுப் போயிருக்கும். புதியவருக்கு, அதிலும் படித்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் வாணியம்பாடி தொகுதி தற்போது மீண்டும் அதிமுக வசம் இருக்கிறது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.