/indian-express-tamil/media/media_files/4dTJc2xtB2CGdjdERXzz.png)
கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
vijayakanth | அரசியல் தலைவர்கள், கலை உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்தவர்கள், பொது வாழ்வில் சிறந்தவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. இதில் முழு அரசு மரியாதை என்பது மாநில அரசு அந்த தினத்தை துக்க தினமாக அனுசரிக்கிறது என்பது ஆகும்.
கடந்த காலங்களில் பிரதமர், முதல்வர் என முக்கிய பிரமுகர்கள் இயற்கை எய்தினால் இந்த சடங்கு செய்யப்பட்டது. அப்போது 17 21,101 என குண்டுகள் வழங்கப்பட்டன.
இதில் 101 குண்டுகள் என்பது அரசருக்கு வழங்கப்படும் உயரிய மரியாதை ஆகும்.
இந்த மரபை பிரிட்டிஷார் கடைப்பிடித்தனர். முதலில் தங்களிடம் தோட்டாக்கள் இல்லை என எதிரி நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த சடங்கு செய்யப்பட்டு வந்துள்ளது.
பின் நாட்களில் இது இறுதி சடங்கின் போது கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் இதற்கான தனியாக சட்டங்கள் இருந்தன.
தற்போது இந்த விவகாரம் மாநில அரசின் கைகளில் உள்ளது. அதன்படி ஒருவருக்கு எந்த மாதிரியான சடங்குகள் மரியாதை வழங்கப்படலாம் என்பதை மாநில முதல்வரை தீர்மானிப்பார்.
இன்று நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது போலீசார் அவரின் உடலை சுமந்து வந்தனர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.