விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் தொடக்கம் எப்போது? திருச்சி கோட்ட மேலாளர் பேட்டி

விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Villupuram-Tanjore-Villupuram-Nagai double track, Tiruchi, Tiruchirappalli, விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் தொடக்கம் எப்போது, திருச்சி கோட்ட மேலாளர் பேட்டி, When construction of Villupuram-Tanjore-Villupuram-Nagai double track start, Trichy Divisional Manager press meet

க.சண்முகவடிவேல், திருச்சி

Advertisment

விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் புதன்கிழமை கூறினார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “திருச்சி - விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன.விழுப்புரம் - தஞ்சை, விழுப்புரம் - நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் விரைவில் துவங்கும் எனத் தெரிவித்தார்.

ரயில்வே துறையை மேம்படுத்த நவீன திட்டங்களை கண்டுபிடிக்கும் தொழில் முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர். 11 வகையான தலைப்புகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.150 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை, திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி பகுதியில் 7 கிலோமீட்டர் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ளது. வேறு எங்கும் மீட்டர் கேஜ் பாதைகள் இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் இந்த 37 கிலோ மீட்டர் தொலைவு அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.

Advertisment
Advertisements

பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் 2021 ரூ19.64 கோடியாக இருந்த வருவாய் இந்தாண்டு ரூ.68.12 கோடியாக மூன்று மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ரூ.115 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 229 கோடி வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli Villupuram Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: