/indian-express-tamil/media/media_files/2025/03/25/ohVnFRHJn3w2Y9ATWge4.jpg)
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி
புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை நிர்வாக அதிகாரி அலுவலகம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பசுவான் புண்ணியத் திருத்தலம்"வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெர்விக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபசுனா திருந்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் தேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,
பக்தர்கள் ஜோதிடர்கள் அச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரயை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சி மற்றும் தனி அதிகாரி அவர்களின் உத்தரவுப்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.