தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: மும்மொழிக் கொள்கை தொடர்பாக அமைச்சர் மகேஷ் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். சி.பி.எஸ்.இ, பள்ளியில் மாணவர்கள் மும்மொழிகள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். 30 லட்சம் குழந்தைகள் மும்மொழி படிக்கின்றனர். தமிழகத்தில் ஆங்கில மொழியில் அதிகம் பேர் படிக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து இருக்கிறது என்றார்.
மெட்ரிக் பள்ளியில் மும்மொழி படிப்பதை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் விளக்க வேண்டும். நாங்கள் சொல்லும் ரூ.30 லட்சம் கணக்கை தாண்டிவிடும் என்றார்.
தி.மு.க., அரசு டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலுக்காக மதுபான ஆலை மூலம் பணத்தை சம்பாதித்து எல்லா தொகுதியிலும் பதுக்கி வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்,.
மும்மொழிக் கொள்கையை அறிவு உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் தியாகராஜன் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்:
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாராவது ஒருத்தர் செய்தியாளர் சந்திப்பில், என் குழந்தை 2 மொழியில் தான் படிக்கின்றனர் என்று தைரியமாக பேசுவார்களா? யாரும் பேச மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம். இதனால் தான் நாங்கள் சம கல்வியை கேட்கிறோம் என்றார்.