மக்கள் நீதி மையத்தின் ‘விசில்’ செயலியில் வந்த புகாரின் அடிப்படையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பட்டினப்பாக்கத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக 'விசில்' எனும் செயலி முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியின் மூலம், பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். அதன்படி, 'சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என ஒரு புகார் வந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாதிப்பிற்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்டார். அத்தோடு அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.