கோவை கார் வெடிப்பு தாக்குதலில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
கோவை கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கு மேல் தொடரும் சோதனை தொடர்கிறது.
Advertisment
கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஜமோசா முபின் என்ற நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
ஜமேஷா முபின்
இவர்மீது வழக்குகள் எதுவும் இல்லை. கோட்டைமேட்டில் உள்ள ஹாஜி முகம்மது பிள்ளை ராவுத்தார் வீதியிலிருக்கும், இறந்தவரின் வீட்டில் மாலை 6 மணி முதல் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
காவல் துறையின் ஒரு குழுவினர் இறந்தவரின் வீட்டிலிருந்து, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள், கைப்பற்றியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.