/tamil-ie/media/media_files/uploads/2017/09/banwarilal-purohit-759.jpg)
Shillong: Assam Governor Banwarilal Purohit being administered oath of office as the Governor of Meghalaya by Justice Dinesh Maheshwari, Chief Justice, High Court of Meghalaya, at Raj Bhavan in Shillong on Saturday. PTI Photo(PTI1_28_2017_000200B)
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் ஏப்ரல் 16ம் தேதி 1940ம் ஆண்டு பிறந்தவர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா காந்தி விலகி, காங்கிரஸ் (இ) ஆரம்பித்த போது, பன்வாரிலால் புரோஹித்தும் அந்த கட்சியில் இணைந்தார். 1978ம் ஆண்டு நாக்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார்.
1980ம் ஆண்டு, நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 1982ம் ஆண்டு மத்திய இணை அமைச்சரானார். 1989ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
அதன் பின்னர் பிஜேபியில் அவர் இணைந்தார். 1991ம் ஆண்டு, பிஜேபி சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வையை சந்தித்தார். 1996ம் ஆண்டு பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1999ம் ஆண்டு பிஜேபியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் 2003ம் ஆண்டு விபர்தா ராஜ்ய பார்ட்டி என்ற கட்சியை ஆரம்பித்தார். மீண்டும் 2009ம் ஆண்டு பிஜேபியில் இணைந்க்தார். பிஜேபி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஸ்சாம் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மேகாலாய கவர்னராக பொறுப்பேற்றார்.
நாக்பூரை தலைமையிடமாக கொண்டு வெளியாகும் தி ஹித்தவாடா (The Hitavada) நாளிதழை நடத்தி வந்தார். 1911ம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலேவால் இந்த பத்திரிகை தொடங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.