இந்தியாவிலேயே அதிக நிலம் வைத்திருப்பவர்கள் பற்றிய முக்கிய தகவலை இங்கே நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய அரசிடம் தான் அதிக நிலம் உள்ளது என்று தகவல் கூறுகிறது. அரசாங்க நிலத் தகவல் அமைப்பின்( ஜி.எல்.ஐ.எஸ்) இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படியில், பிப்ரவரி 2021ம் ஆண்டில், இந்திய அரசு சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தின் உரிமையாளராக இருந்தது. இந்த நிலத்தில் 51 அமைச்சகங்கள் மற்றும் 116 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.
இந்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை விட குறைந்த அளவு நிலத்தை உடைய 50 நாடுகள் உள்ளன. கத்தார் 11586 சதுர கிலோ மீட்டர், ஜமைக்கா 10,991 சதுர கிலோ மீட்டர், லெபனான் 10452 சதுர கிலோ மீட்டர், சிங்கப்பூர் 726 சதுர கிலோ மீட்டர் நிலம் கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்திற்கு அதிகபட்சமாக நிலம் உள்ளது. நாடு முழுவதும் 2926.6 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சகரம், நிலக்கரி அமைச்சகம் 2580.92 சதுர கிலோ மீட்டர் நிலம் உள்ளது. எரிசக்தி அமைச்சகத்திற்கு 1806.69 சதுர கிலோ மீட்டர் நிலம் உள்ளது. கனரக தொழிற்சாலைகள் 1209.49 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு 1146 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது.
இந்திய அரசாங்கத்தை தொடர்ந்து அதிகபடியான கத்தோலிக்க திருச்சபையிடம் அதிக நிலங்கள் உள்ளது. தேவாலயங்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் , மருத்துவமனைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கத்தோலிக்க திருச்சபை நாடு முழுவதும் 14, 429 பள்ளிகள்-கல்லூரிகள் 1086 பயிற்சி நிறுவனங்கள், 1,826 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை நடத்துகிறது. கத்தோலிக்க திருச்சபையிடம் உள்ள நிலத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்களின் வக்ஃயு வாரியத்திடம் அடுத்தபடியாக நிலம் உள்ளது. இதில் நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள், மத்ரஸாக்கள் மற்றும் கல்லறைகள் உள்ளது. வக்ஃயு வாரியத்திடம் 6 லட்சத்திற்கு அதிகமான அசையாத சொத்துக்கள் உள்ளது.