டிஜிபி சைலேந்திர பாபு பணி ஓய்வு பெருவதை, ஒட்டி அவர் பதவிக்கு, காவல்துறையில் அதிக போட்டிகள் நிலவுகிறது.
டிஜிபி சைலேந்திர பாபு ஜூன் 30ம் தேதி பணி ஓய்வு பெருவதையொட்டி அவரது பதவிக்கு அடுத்து, யார் வருவார் என்ற போட்டி நிலவுகிறது. யு.பி.எஸ்.சி பரிந்துரை செய்துள்ள 12 காவல்துறை அதிகாரிகள் பட்டியலில் டெல்லி கமிஷ்னர் சஞ்சை அரோரா முதல் இடத்தில் இருக்கிறார்.
யு.பி.எஸ்.சி பரிந்துரை செய்யும் முதல் மூன்று அதிகாரிகளில் தமிழக அரசு ஒருவரை தேர்வு செய்யும். அரோராவை தொடர்ந்து டி.ஜி.பி பி.கே ரவி, சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால் ஆகியோர் இருக்கின்றனர். அடுத்தாக டி.ஜி.பி ரேங்கில் இருக்கும் அதிகாரிகளாக எ.கே விஷ்வானந்தன், அப்பாஷ் குமார், டி.வி ரவிச்சந்திரன், சீமா அகர்வால், அம்ரேஷ் புஜாரி இருகின்றனர். பணியாற்றிய வருடங்களை வைத்து பார்க்கும்போது, ராஜிவ் குமார், சந்திப் ராய் ராத்தோர், அபய் குமார் சிங், கெ. வன்னியப் பெருமாள் ஆகியோரும் தேர்வு பட்டியலில் உள்ளனர்.
பிரமோத் குமார் மற்றும் ராஜேஷ் தாஸ் ஆகிய இருவருமே 1989 பேச்சில் இருந்தாலும், அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டால், இந்த தேர்வு பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.
டிஜிபியாக தேர்வு செய்யப்படும் அதிகாரி 2 வருடங்கள் வரை, இந்த பதவியில் இருப்பார்.