சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு ஏன்?

Why ADMK walks out from Tamilnadu Budget 2021 Meet Tamil News நமது அம்மா நாளிதழ் ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து, பத்திரிக்கை சுதந்திரத்தைத் தடுத்துள்ளார்கள்

Why ADMK walks out from Tamilnadu Budget 2021 Meet Tamil News
Why ADMK walks out from Tamilnadu Budget 2021 Meet Tamil News

Why ADMK walks out from Tamilnadu Budget 2021 Meet Tamil News : ஆளும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுத் தன் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் விளக்கக்காட்சியைப் புறக்கணித்து தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

திமுக அரசின் முதல் காகிதமில்லா பட்ஜெட் தாக்கலின்போது, சபாநாயகர் அப்பாவு, எம்எல்ஏக்களுக்கு தங்கள் கணினியில் பட்ஜெட் ஆவணத்தை அணுகுவதற்கான உதவிக்குறிப்புகளை வழங்கிக் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தன் கட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கத் தொடங்கினார் மற்றும் அவருடைய கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு வாய்ப்பையும் கோரினார்.

மேலும், பழனிசாமியை ஆதரித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுந்து நின்று அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு ​​வருகிற திங்களன்று பொதுக் கலந்துரையாடலின் போது தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அப்பாவு பதிலளித்தார்.

இருப்பினும், பழனிசாமி அவருடைய அறிக்கையைத் தொடர்ந்து வாசித்தார். அதில், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வது குறித்துதான் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு இன்றுவரை தீர்வு காணவில்லை. உண்மைக்கு புறம்பாக அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு, பழுவாங்கும் எண்ணத்துடன் இருக்கிறார்கள். நமது அம்மா நாளிதழ் ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து, பத்திரிக்கை சுதந்திரத்தைத் தடுத்துள்ளார்கள் உள்ளிட்ட திமுக மீதான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


அதனை முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அவருடைய தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். எனினும், அதிமுகவின் கூட்டணியில் இருக்கும் பாஜக மற்றும் பாமக கட்சியினர் அமைதியாகவே இருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why admk walks out from tamilnadu budget 2021 meet tamil news

Next Story
சுவரொட்டிகள் இல்லாத மாநகரம்: சிங்கார சென்னை 2.0 குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?Singara chennai, chennai central, chennai news, Tamil Nadu budget
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com