சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று (ஜன. 05) பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சிக்கு மாணவிகள் பலரும் வந்திருந்தnar.
அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்துவந்த சிலரிடம் இருந்து துப்பட்டா வாங்கி வெளியில் வைத்ததாகவும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.இது குறித்து சென்னை மாநகர போலீஸ் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளிடம் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன் என காவல் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எழும்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு சென்னை காவல் (SCP) பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம். கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
இந்நடவடிக்கை அங்கு பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரியவருகிறது. இனி அவ்வாறு திகழாவண்ணம் இருப்பதற்கு பாதுகாப்பு சென்னை காவல் பிரிவிற்கு (SCP) தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“