நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்துவருகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 இடங்களில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்) 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனித் தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும், கொங்கு மக்கள் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அப்போது, “பாஜக அரசு மாநிலங்களை அழிக்க நினைக்கிறது. நமது மொழி, பண்பாட்டை அழிக்க பார்க்கிறார்கள்.
பாரத பிரதமர் மோடி வெறுங்கையால் முழம் போடுகிறார். அவரின் பயணங்களால் ஏதேனும் வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்துள்ளனவா?
சென்னை, தூத்துக்குடி பெருவெள்ளத்தின்போது மக்களை பார்க்க மோடி வந்தாரா? 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இப்போது பணிகளை துவங்குகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“