scorecardresearch

ஒசூரில் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்த 2,000 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்; காரணம் என்ன?

ஓசூரில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜூலை 13, 14 என 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் அறிவிப்புக்கு காரணம் என்ன?

msme, hosur, strike, two days strike announced, msme announced strike

ஒசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியது:

ஒசூரில் 2,000-கும் மேற்பட்ட குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள், சுமார் 1,03,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிகிறது. படித்த மற்றும் படிக்காத கிராமப்புற இளைஞர்கள். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் போன்று அனைத்து தரப்பினருக்கும் பணிகளை அளித்து வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக உள்ளது.

தொழில் முனைவோராகும் இளைஞர்களுக்கு, சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் நம்பிக்கை தரும் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.

சிறு, குறு நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி சமூகத்தின் பல நிலைகளில் உள்ள மக்களின் வாழ்வில் நேரடியாக பிரதிபளிக்கும்.

தற்போது, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் சவாலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பன்மடங்கு பெருகி உள்ளது. இயந்திரங்கள், தொழிற்சாலைக்கான இடம், கட்டுமான செலவு விலை, தொழிலாளர்களின் ஊதியம், எரிபொருள் விலை, மூலப்பொருள் விலை, பராமரிப்பு செலவு, மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் போன்ற நெருக்கடியால் சுமார் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட்டுள்ளது. எனவே, பெரிய தொழில் நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்கள் செய்து தரும் ஜாப் ஒர்க்கிற்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் 2 நாட்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Why hosur msme industries announced two days strike

Best of Express