/indian-express-tamil/media/media_files/2025/02/18/9eYN0DKv4wh7sfHuNScu.jpg)
தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்கு? மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக - செல்வபெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை கோவையில் பேட்டி அளித்ததாவது;
எல்.முருகன் கூறுவது போன்றோ, பா.ஜ.க. தலைவர் கூறுவது போன்றோ இந்தியா கூட்டணி இல்லை. எங்கு எந்தவிதமாக ஓட்டையும் கிடையாது. நெல்லிக்காய் மூட்டைதான் சிதறும். இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. எஃகு கோட்டை கூட்டணி. சிதறுவதற்கு வாயுப்புகள் இல்லை. சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தால் நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். அ.தி.மு.க.வும், பா.ஜ.க-வும் பகல் கனவு காண்கிறார்கள். ஏதாவது குளிர் காயலாமா ஆதாயம் ஏற்படுமா என்று, ஒரு ஆதாயமும் ஏற்படாது, எந்த குளிரும் காயமுடியாது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள், அயோத்தியில் ராமர் பா.ஜ.க.வை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பா.ஜ.க. கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க. இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை. மணிப்பூருக்குச் செல்லாமல் இங்கே முருகன் மாநாடு என்றால் முருகன் மன்னித்து விடுவாரா?
தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் தரமால் மறுக்கிறீர்கள். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் உங்களை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார். தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா? பா.ஜ.க. வேஷம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது. அமித்ஷாவின் மகனே ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு மக்களே தற்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். அங்கேயும் அரசியல் இருக்கிறது, இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை
இ.பி.எஸ். ஆங்கில சொல்லா? அல்லது தமிழ்சொல்லா? எடப்பாடி பழனிச்சாமையை பார்த்து இ.பி.எஸ். என்கிறார் அமித்ஷா . அவ்வாறென்றால் இ.பி.எஸ்-ஐ அவமானபடுத்துகிறாரா? காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான். 3-வது மொழியை திணிக்கிறார்கள். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்கிறார்கள் முருகன் இருக்கிறார் என்றால் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார்?
தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள். அப்போது தமிழ் கடவுள் முருகன் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள். விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கும் அல்லது உபாதை இருந்திருக்கும். அதனால் அழித்து இருப்பார்கள் விபூதி அளிப்பது என்பது அரசியல். அதை அரசியல்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.