மதுரையில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் குளிர்! என்ன காரணம்?

கடந்த 3 நாட்களாக 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிர்

இந்த வருடம் தமிழகம் இதுவரை சந்தித்திராத அளவிற்கு கடுமையான குளிரை கண்டுள்ளது. குறிப்பாக வெயில் நகரங்கள் என அழைக்கப்படும் சென்னை, மதுரை போன்ற நகரங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாகியுள்ளது. மதுரையை பொருத்தவரையில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குளிர், பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

இதற்கு என்ன காரணம்? பிரபல நாளிதழ் ஒன்று இதுக் குறித்த பிரத்யேக செய்தியை வெளியிட்டுள்ளது.

எப்போதுமே பரபரப்பாக காணப்படும் மதுரை மாநகரம் கடந்த டிச.16 (மார்கழி முதல் நாள்) முதல் கொடைக்கானல், ஊட்டியை போல் அதிகாலை நேரங்களில் உறைபனியும் கடும் குளிரும் மக்களை நடுங்க வைத்துய்க் கொண்டிருக்கிறது.

கொடைக்கானலில் குளிர் என்பது கூடுவதோ, குறைவதோ வழக்கமானதாகத்தான் இருக்கும்.ஆனால், மதுரை போன்ற வெப்ப நகரங்களில் கூட குளிர் வழக்கத்திற்கு மாறாக வாட்டி வதைப்பது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிகாலை தொடங்கி இரவு நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு உறைபனி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மட்டுமில்லை திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை குளிர்வைக்கவில்லை.

இதுக்குறித்து காமராசர் பல்லைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் துறைத் தலைவர் பேராசிரியர் கே.முத்துச்செழியன் அந்த செய்தி தளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், ‘‘மதுரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 3 நாட்களாக 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிரும், பனியும் அதிகரித்துள்ளது. காலை வேளைகளில் பனி உறை வெப்பம் 14 டிகிரி செல்சியஸாகவும், வெளி வெப்பம் 17 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது,’’ என்று விவரித்துள்ளார்.

மதுரை, சென்னை போன்ற நகரங்கள் திடீரென்று கடுமையான பனியை சந்திப்பதற்கு காரணம் ஹை பிரஷர். லோ பிரஷராக இருந்தால் நமக்கு மழைக்கு வாய்ப்பாக அமையும். ஹை பிரஷர் என்றால் அதிக காற்றழுத்த சுழற்சி என அர்த்தம். பொதுவாகவே டிசம்பர் மாதம் ஹை பிரஷர் தான். இந்த சமயங்களில் மேகங்கள் இருக்காது.

இதனால் காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் காரணமாக மக்கள் அதிகப்படியான குளிரை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி (தி இந்து)

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why madurai feels more colder than ever before this year

Next Story
விபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவுIndonesian massage therapist, இந்தோனேசிய
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X