தமிழக அரசு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டது ஏன்?

முதல் தகவல் அறிக்கையை பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது போன்றவை கடுமையாக பின்பற்று வருகின்றது.

Tamil Nadu Government revealed Pollachi gang-rape survivor's identity
Tamil Nadu Government revealed Pollachi gang-rape survivor's identity

Tamil Nadu Government revealed Pollachi gang-rape survivor’s identity : ஊரே இன்று பேசிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரத்தை முதலில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றச் சொல்லி குரல்கள் வலுத்துவந்தன. ஒரு சில நாட்களில் அந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றக் கோரி உத்தரவிட்டது தமிழக அரசு.

அப்படி அளிக்கப்பட்ட உத்தரவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ,முழுவிபரங்களையும், எங்கே படித்தார் மற்றும் அப்பெண்ணின் அண்ணன் ஆகியோரின் பெயரையும் வெளியிட்டிருப்பது பெரிய அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அரசு உத்தரவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டது ஏன் ?

அரசு உத்தரவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோடு சேர்த்து, அவர் படிக்கும் கல்லூரியின் பெயர், மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல்த்துறையில் புகார் அளித்த அப்பெண்ணின் அண்ணன் பெயர் என அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த அரசு உத்தரவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பெண்ணின் பாதுகாப்பினை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது போன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடாமல் இருந்து அவர்களின் நன்மதிப்பினை காப்பாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இந்த செயல்பாடு பெரியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சட்டம், பாலியல் துன்பங்களுக்கு ஆளாகின்ற பெண்கள், இறந்தே போயிருந்தாலும் அவர்களின் பெயர்களை அரசு நிறுவனமோ, ஊடகங்களோ வெளியிடுவதை தடை செய்துள்ளது. குறிப்பாக நடைபெற்ற குற்றங்கள் இந்த பிரிவின் கீழ் வரும் போது, பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை வெளியிடுவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பிரிவு 376, 376A, 376B, 376C or 376D .

காவல்த்துறை, தடவியல் நிபுணர்கள் என யாரும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை, அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி, வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது போன்றவை கடுமையாக பின்பற்று வருகின்றது.

அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் நடத்தப்படும் போதும் சரி, சமூக வலைதளங்களில் அவர்களின் நலனுக்காக கருத்துகள் பதிவு செய்யும் போதும் கூட அவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்பதை கடந்த டிசம்பர்,2018 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.

மேலும் படிக்க : Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி வழக்கு… கொந்தளிப்பில் தமிழகம்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why tamil nadu government revealed pollachi gang rape survivors identity in government order

Next Story
Pollachi Sexual Assault : பொள்ளாச்சி வழக்கு… கொந்தளிப்பில் தமிழகம்Pollachi Sexual Assault Live Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com