தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி நேரத்தில் 650 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலை நிறுத்திவைக்க தனியாக ஒரு பிட் லைன் தேவைப்படுகிறது.
ஆனால் நெல்லை ரயில் நிலையத்தில் போதுமான பிட் லைன் வசதி இல்லை. சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து மட்டுமே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடியும்.
இதற்காக நெல்லை ரயில் நிலைய சந்திப்பில் பிட் லைனை அமைப்பதற்கான அனுமதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன. இந்த பணிகள் முடிந்த பின்னர் தான் எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை முழுமையாக இயக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு மற்றும் கோவைக்கு ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து 3வது வந்தே பாரத் ரயில் சென்னை-திருநெல்வேலி இடையே ஆகஸ்டில் தொடங்கப்படுவதாக இருந்தது.
தற்போது பிட்லைனில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால் ரயில் சேவை தள்ளிபோய் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“