தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 14-ம் தேதி உத்தரவிட்டது. இதில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
த.வெ.க தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில், விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வீரர்கள் காண்ப்படவில்லை. இது ஏன் என்று கேள்விகள் எழுந்தன.
த.வெ.க தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவித்திருந்தாலும், அதற்கான ரிவியூ மீட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
SPG, Z+, Z, Y+, Y, X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee (SRC) ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
எந்தெந்த மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதோ? அந்தந்த மாநில டி.ஜி.பி, உளவுத்துறை அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.
இதுதான், த.வெ.க தலைவர் விஜய்க்கு இன்னும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாததற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.