scorecardresearch

கடைகளில் தமிழ் பெயர் பலகை.. ராமதாஸ்-க்கு விக்கிரமராஜா கோரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Wickramaraja
விக்கிரமராஜா

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், “வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும்
ஏப்ரல் 18ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்‌ குறிப்பிட்டார்.

மேலும் எம்.ஆர்.பி., கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்பிரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும்,
ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமராஜா கூறினார்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌,
இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது என கூறினார்.
இதையடுத்து அவர்‌, எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Wickramaraja said that a months time is not enough to put name boards in tamil in the shops