தமிழ்நாடு நெடுஞ்சாலையத் துறை கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை இடித்து ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.
தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்தது. ஆனால், திருவான்மியூர் மற்றும் அக்கறை இடையே உள்ள தனியார் நில உரிமையாளர்கள் அவ்விடங்களை காலி செய்ய மறுத்து நீதிமன்றத்தை அணுகியதால், இந்த திட்டம் தாமதமாகியது.
நெடுஞ்சாலைத் துறைக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நூற்றுக்கணக்கான நில உரிமையாளர்களுக்கு (திருவண்மியூர் மற்றும் அக்கரை இடையே வசிக்கும்) ஜூன் மாதம் இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகையால், தற்போது கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் பாலவாக்கத்தில் சாலை விரிவாக்கப் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். மேலும், ஈசிஆர் பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோளிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவாக்கப் பணிகளை விரிவுபடுத்த ஒப்பந்ததாரர்களுடன் கையெழுத்தாகியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட கிராமங்களில் அடுத்த வாரம் கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கஃபேக்கள், ரிசார்ட்டுகள், திருமண மண்டபங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதிக சுற்றுலாப் பயணிகள் பயனடைவார்கள் என்பதால், அதை விரிவுபடுத்துவது பயனளிக்கும் என்று மக்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil