தர்மபுரியில் கணவனின் இன்சூரன்ஸ் பணத்திற்காக, மனைவியே அவரை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27 ஆம் தேதி தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் டி-குண்டு அருகே 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அப்போது தான் இறந்தவர் பெயர் மாதேசன் என்று, அவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜவுளி வியாபாரியான இவர் திடீரென்று உயிரிழந்தது அவரின் குடும்பத்தாரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் மாதேசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதலில் மாதேசன் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் போலீசார் அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டுவந்து வீசிசென்றார்களா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாதேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு, அவரின் மனைவி ரேவதி மற்றும் 2 மகன்கள் இடமும், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரேவதியின் பதில்களில் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம், ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதியின் மூத்த மகன் யோகேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தந்தை மாதேசனின் பிரேத பரிசோதனை சான்றை தரும்படி கேட்டுள்ளார். அவனை பிடித்து போலீசார் விசாரித்த போது, தன் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அந்த பணத்தை அலுவலகத்தில் இருந்து பெற தேவைப்படுகிறது, என் அம்மா ரேவதி தான் இதை வாங்கி வரச் சொன்னார் என்று கூறியுள்ளான்.
அதன் பின்பு, யோகேஷ் மற்றும் ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. கணவனின் இன்ம்சூரன்ஸ் பணத்திற்காக அவரை கள்ளக்காதலுடன் சேர்ந்துக் கொன்றதாக ரேவதி போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
ரேவதியின் வாக்குமூலம் ”எனக்கும், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரும் சில நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. ஒருநாள் எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த எனது கணவர் என்னை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். அப்போது தான் அவரின் பெயரில் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பணம் வங்கியில் இருப்பது எனக்கு தெரிய வந்தது.
பின்பு, ஜெயபிரகாஷ், அவரது தம்பி வெங்கடேசன், அவரின் நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதுகுறித்து என் மூத்த மகன் யோகேசுக்கும் ஒருநாள் தெரிய வந்தது. அவனும் எங்களுக்கு உதவி செய்தான். பின்னர், சுமார் 1 வாரம் பிளான் போட்டு எனது கணவர் குடித்த வந்த நேரம் பார்த்து அவரது கழுத்தை நெருக்கி கொலை செய்தோம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை கொலை செய்து விட்டேன். ஆனால், எனது மகன் பிரேத பரொசோதனை அறிக்கை வாங்க வந்தபோது தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.