scorecardresearch

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார்! – அழகிரி அறிவிப்பு

பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார்
ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார்

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார்

திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று மு.க.அழகிரி அறிவித்துள்ளார்

மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி முட்டல் மோதல் சங்கதி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வரும், 5-ம் தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார் அழகிரி. இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று 7-வது நாளாக அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “தி.மு.க.வில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

அவ்வாறு சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிறகு முடிவு எடுக்கப்படும். தி.மு.க-வின் பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர் என்பதை நினைவுகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Will accept stalin as leader says azhaigiri