நாகர்கோவிலின் பிரதான வர்த்தக பகுதியான கோட்டார் முதல் பல ஏக்கர் நிலம், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் தானமாக கொடுக்கப்பட்ட இடம் ஆகும். இந்த இடத்தின் உரிமை செட்டித்தெரு விநாயகர் கோயில் நிர்வாகத்திடம் உள்ளது. தற்போது இந்த இடத்தில் கடைகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த இடத்தின் நில வாடகை உரிமை பெற்றவர்கள் அந்த இடத்தை வேறு யாருக்காவது மாற்றி கொடுப்பதும், புதிய உரிமம் பெற்வர்கள் கோயில் நிர்வாகத்திடம் தங்களது பெயரில் உரிமம் பெற்றுக் கொண்டு இடத்தை அனுபவித்து வருவதும் தொடர்கிறது.
இந்நிலையில், காசி செட்டியார் என்பவர் 1984ஆம் ஆண்டு அந்த இடத்ததின் தரை உரிமையை பெற்று அதில் இரண்டு திரைகள் கொண்ட சக்கரவர்த்தி என்ற திரையரங்கை நடத்திவந்தார். இதற்கிடையில், எஸ்.ஏ.ராஜா என்பவர் 2009ஆம் ஆண்டு காசி செட்டியாரிடம் இருந்து திரையரங்கு கட்டடத்தின் உரிமையை பெற்றார்.
தொடர்ந்து, இரண்டு திரைகள் இருந்த அரங்கை மூன்று திரை உடையதாக மாற்றினார். ஆனால் திரையரங்கின் உரிமம் மாவட்ட நிர்வாகத்தால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் நீதி மன்றத்தை நாடினார்.
அப்போது, ஏற்கனவே செயல்பட்ட திரையரங்கின் உரிமை தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்போதைய மாவட்ட ஆட்சியர், செட்டிதெரு விநாயகர் கோயில் நிர்வாகம் மட்டுமின்றி இந்து அறநிலையத்துறையிடமும் அனுமதி பெற வேண்டும் என்றார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்யிடம் தமிழிடம் ஜாய் எஸ்.ஏ. ராஜா கூறுகையில், “ஏற்கனவே காசிசெட்டியார் வாங்கிய திரையரங்கு உரிமை, அந்த இடத்தை நாங்கள் வாங்கிய பின்னர் எங்களுக்கு வந்தது. எனினும் அன்றைய மாவட்ட ஆட்சியர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார். அவருக்குபின் வந்த ஆட்சியரிடம் நாங்கள் ஏற்கனவே பெற்ற உரிமையை பெற்று நடத்தினோம்.
அதன்பின்னரும் தியேட்டரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுகுறித்து முழுமையாக கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்.
அதிகாரிகளின் நிலைப்பாட்டால் , தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதோ?. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து உள்ளனர். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/