/indian-express-tamil/media/media_files/mUZPFht1zN4rSwS0y3lU.jpg)
புதுச்சேரியில் ஒரு யூனியன் பிரதேசமாகும் இங்கு ஒரே ஒரு தொகுதி பாராளுமன்ற தொகுதி உள்ளது.
அடுத்து1996 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மரைக்காயர் வெற்றி பெற்றார் அதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டார். அவரை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிட்டார். அவரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 995 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வென்றார். புதுவை எம்.பி. தொகுதி தேர்தல் முடிவில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் புதுச்சேரியை பொறுத்தவரை ஆரம்ப கல்வி முதல் மருத்துவ படிப்புவரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் வருடந்தோறும் என்ஜினீயர்கள், டாக்டர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் வரிச்சலுகைகள் இருந்ததால் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டன. ஆனால் இப்போது அதுபோன்ற சலுகைகள் எதுவும் இல்லாததால் தொழிற்சாலைகள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. அதுமட்டுமின்றி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வந்தபின் பிற மாநிலங்களுக்கு இணையாக விலைவாசியும் உயர்ந்தது. இதனால் பொருட்கள் வாங்க வெளிமாநிலத்தவர் வராததால் புதுவையில் வியாபாரம் குறைந்துள்ளது. கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிலைக்கு இடையேயான மேம்பால திட்டம், புதுச்சேரி-அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை திட்டம் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டமும். அறைகுறையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டபடி பெரிய மார்க்கெட்டை மறுகட்டுமானம் செய்யும் பணி தொடங்கவே இல்லை. அதேபோல் புதிய பஸ்நிலைய மேம்பாட்டு பணிகளும் இழுபறியாகவே உள்ளது. நகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன் அங்காடி அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூமிபூஜை போடப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் எந்த பணியும் நடைபெறவில்லை. குடிநீர் பிரச்சினை சாலை, மின்சாரம் போன்ற வசதிகள் இருந்தாலும் நகரப்பகுதியை பொறுத்த வரை குடிநீர் பிரச்சினை உள்ளது. போதிய தண்ணீர் கிடைத்தாலும் அதில் கடல்நீர் கலந்து உவர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது.
இதற்காக கிராமப்புறங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து சப்ளை செய்யும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்பினை தந்த பாரதி, சுதேசி, ரோடியர் மில்கள் தற்போது மூடப்பட்டு கிடக்கின்றன. இவற்றை திறந்து ஜவுளி பூங்கா அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. புதுச்சேரி எம்.பி. தொகுதியை பொறுத்தவரை 11 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார்.பா.ஜ.க சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. சார்பில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். பா.ஜனதா வேட்பாளரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 3 முறை அமைச்சர் பதவியும் வகித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது முதல்-அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர் 2021-ல் காங்கிரசை விட்டு வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது என்.ஆர்.
காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்தா டாக்டர் மேனகா ஆகியோர் தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.11 முறை வென்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் தக்க வைக்குமா? அல்லது பா.ஜனதா தனது கணக்கை தொடங்குமா? என்ற போட்டி எழுந்துள்ளது. இரு கட்சிகளையும் பொறுத்தவரை 2 வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். மக்களை எளிதாக சந்திக்க கூடியவர்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்கு பலமாக உள்ளது.பா.ஜனதா கட்சி வேட்பாளரான அமைச்சர் நமச்சிவாயம் சார்ந்த வன்னியர் சமூக ஆதரவு, முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சொந்த அண்ணன் மருமகன் என்பது கூடுதல் பலமாக உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்த்து போட்டியிட்டது. புதுச்சேரி எம்.பி. தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண்கள், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 148 பேர் என மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 335 வாக்காளர்களும், காரைக்காலில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 214 வாக்காளர்களும், மாகியில் 31 ஆயிரத்து 10 வாக்காளர்களும், ஏனாமில் 39 ஆயிரத்து 355 வாக்காளர்களும் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.