‘வாங்க கைகோர்ப்போம்’ ராகுல் காந்தி தமிழ் வீடியோ

Will Defend and Preserve the Unique Culture of Tamils says rahul gandhi: தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலை நாங்கள் தடுப்போம்.

By: Updated: January 23, 2021, 12:06:10 PM

‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இன்று முதல் (23ம் தேதி ) முதல் மூன்று நாட்கள், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தமிழக பயணம் குறித்து   ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ” கொங்கு பெல்ட்டில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட மீண்டும்  தமிழ்நாட்டிற்கு வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலை நாங்கள் தடுப்போம்.   தனித்துவமான கலாச்சாரத்தை நாங்கள் பாதுக்காப்போம்” என்று பதிவிட்டார்.

 

 

 


 

மேலும், ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ குறித்த பிரச்சார பாடல் ஒன்றையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டார். மதுரை ஜில்லா கலகலக்க, நெல்லை சீமை அனல் பறக்க….. நம்ம ராகுலோட ஒன்னா கை கோர்ப்போம், அட வாங்க ஒரு கை பாப்போம் ” என்ற  வரிகள் அப்பாடலில் இடம்பெற்றுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Will defend unique culture of tamils rahul gandhi tamil nadu three day visit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X