திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கமல் கலந்து கொள்வாரா?

ஏப்ரல் 1ம் தேதி எங்கே போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். திமுகவில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. வந்த பின்னர் பார்க்கலாம்

காவிரி பிரச்னையில் திமுக சார்பில் ஏப்ரல் 1ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டும், இதுவரையில் அமைக்கப்படவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில், அனைத்து கட்சியினருடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக திமுக செயல் தலைவர் அறிவித்தார். அதன் படி ஏப்ரல் 1ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என அறிவித்தார். மேலும் ஏப்ரல் 15ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2ம் தேதி அதிமுக சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்போவதக அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன், மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டதில் கலந்து கொள்வீர்களா? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், ‘‘ஏப்ரல் 1ம் தேதி எங்கே போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். திமுகவில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. வந்த பின்னர் பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 1ம் தேதி, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறார்.

×Close
×Close