கோவை மத்திய சிறை வளாகத்தில் வ.உ. சிதம்பரனாரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செலுத்த வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கைகுலுக்கி பரஸ்பர மரியாதை செய்து கொண்டனர்.
Advertisment
கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று மரியாதை செலுத்தினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். மலர் மரியாதை நிகழ்விற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ வ.உ. சிதம்பரனாரின் தியாகங்களையும், சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ
மேலும் கோவை அவினாசி சாலைக்கு சிதம்பரனாரின் பெயர் வைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதலமைச்சரே நினைப்பார், நிச்சயம் செய்வார் எனப் பதிலளித்தார்.
இதனையடுத்து அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைப்பது தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வருவது தொடர்பாக கேட்டபோது உயர்ந்த தலைவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவரைப் பற்றி கேட்கிறீர்கள் என காட்டமாக பதில் அளித்து நிகழ்வின் இடத்திலிருந்து சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil