அதிமுக இணைப்பது தொடர்பாக கூடிய விரைவில் சசிகலா, டிடிவி தினகரை சந்திக்க உள்ளதாக பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை பிரச்சனை தொடங்கி உள்ளது. மேலும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து. உண்மையான அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வியும், யாரிடம் அதிமுக இருக்கிறது என்ற குழப்பமும் நிலவுகிறது. இந்நிலையில் ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் எடப்பாடியை அழைத்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட செயல்பாடு என்ன ? என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
”மாவட்டம் தோறும் அதிமுக இணைப்பை வலியுறுத்தி புரட்சி பயணம் தொடருவோம். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மக்களுக்கு முன்பு முன்வைத்துள்ளதே வெளியிட்டதற்கு சமம்தான். அன்று இருந்த நிலைபாட்டில் தர்ம யுத்தம் தொடங்கினேன். ஆனால் இன்று அதிமுகவை இணைக்க வேண்டும் என்பதால் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும், டிடிவி தினகரனையும் விரைவில் சந்திக்க உள்ளோன். 1.5 கோடி தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். கட்சி நிர்வாகிகள் பலரும் என் பக்கம் வருகின்றனர். அதிமுகவை இணைப்பதே எங்கள் நோக்கம் “ என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“