முக்கடலும் சங்கமிக்கும் குமரிக்கடல் நடுவே வான் தொடும் திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடல் நடுவே வான் மேகங்கள் உரசி செல்லும் திருவள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் மு.கருணநிதி 2000அம் ஆண்டில் ஒரு அழகான விழாவில் திறந்துவைத்தார்.
Advertisment
இந்தச் சிலை திறக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில், 22ஆவது ஆண்டின் விழாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் தனிப் படகில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.
திருவள்ளூவர் சிலைக்கு மரியாதை செலுத்திய நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி
மேலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் தமிழ் சான்றோர்கள் திருவள்ளுவர் சிலை பாதத்தில் பல வண்ண மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிலையில்,.குமரியை சேர்ந்த தமிழ் அமைப்புகள் அடுத்த ஜனவரி திங்களில் அய்யன் சிலை திறப்பு தினத்தை அரசு விழா கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/