அருண் ஜனார்த்தனன்
தமிழ் திரை உலக நாயகனும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைய எடுத்த முடிவு, காங்கிரஸை முக்கிய அங்கமாக கொண்ட தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி விரைவில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கமல்ஹாசன் டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் ராகுலுடன் நடைபயணம் மேற்கொள்வதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார். இது அவரது அனுதாபங்கள் எங்கு உள்ளது மற்றும் அரசியலில் அவர் எடுக்கும் திசையை வெளிப்படுத்துகிறது.
மக்கள் நீதி மய்யம் 2018இல் தொடங்கப்பட்டபோது, தனித்துப் போட்டி என கமல்ஹாசன் அறிவித்தார். தொடர்ந்து, அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தார்.
ஆனால் தற்போது கமல்ஹாசன் தனித்துப் போட்டி என்ற பாதையில் இருந்து விலகிசெல்கிறார். அவர் காங்கிரஸை நோக்கி நகர்கிறார்.
இதற்கிடையில் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்கிறார் என மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், யாத்திரையில் இணைந்த இரண்டாவது பிரபலமான தமிழ் அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருக்கக்கூடும் என்று கூறினார். கடந்த மாதம், ம.தி.மு.க., நிறுவனரும், தி.மு.க., கூட்டணி கட்சியான வைகோவின் மகனுமான துரை வைகோ, ஹைதராபாத்தில் ராகுலுடன் சுமார் 30 நிமிடங்கள் நடந்தார்.
தமிழகத்தில், இரண்டு பெரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் 80% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் சுயேச்சையாக மக்கள் ஆதரவைப் பெற முயற்சித்து வந்தது.
தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ராகுலின் அணிவகுப்பில் கமல்ஹாசன் பங்கேற்பது மேலும் ஒரு கட்சியை தங்கள் முகாமில் சேர்க்கும். “எங்கள் கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது என்று அர்த்தம்.
2021 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் 2.52% வாக்குகளைப் பெற்றது, இது டிடிவி தினகரனின் (அதிமுக கிளர்ச்சித் தலைவர்) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (AMMK) விட சற்று அதிகம். 2.3%,” என்றார்.
மேலும், கடந்த காலங்களில் திமுகவால் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்பட முடியாத நிலையில், தற்போது அவர்கள் கூட்டணி சேரும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
2019 லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தொழிலதிபரும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் கூட்டணியை திமுக இழக்க நேரிடலாம்.
ஏனெனில் “கிட்டத்தட்ட அவர் (பாரிவேந்தர்) இப்போது பாஜக முகாமில் இருக்கிறார். எனவே கமல்ஹாசன் வருவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இல்லாவிட்டால் அவர் காங்கிரஸ் மூலம் எங்களுடன் சேரலாம், ”என்று திமுக தலைவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக எம்.என்.எம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினாலும், அது தொடர்ந்து நீடிப்பதும், மாநில அரசியலில் வலுவாக தொடர்வதும் சவாலானது. ஆதலால்,, 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் சேரும் முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காங்கிரஸ் மூலம் திமுகவை அரவணைக்க கமல்ஹாசன் முயற்சித்தாலும், 2021 தேர்தலில் MNM போட்டியிட விரும்பிய இடங்களின் எண்ணிக்கை திமுக முகாமால் “மிக அதிகம்” என்று கருதப்பட்டதால் அது பலனளிக்கவில்லை.
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசனை சேர்ப்பதற்கு காங்கிரஸ் முகாமும் அதிக தூரம் செல்ல தயாராக இல்லை, ஏனெனில் அது முன்னாள் எம்.என்.எம்-க்கு அதன் சொந்த ஒதுக்கீட்டில் இருந்து தொகுதிகளை ஒதுக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கலாம்.
2021 தேர்தலுக்குப் பிறகு MNM கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தலைவர்களையும் பிரபலமான முகங்களையும் இழந்ததால் கமல் உள் அழுத்தத்தை எதிர்கொண்டார், அதில் அதன் வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தனர். கட்சியின் அவலநிலைக்கு ஹாசனின் “சுய பாணி தலைமை” என்று குற்றம் சாட்டி, பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினர்.
எம்என்எம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், எம்.எம்.முருகானந்தம், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், உமாதேவி, சி.கே.குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர், முன்னாள் தமிழக ஐ.டி செயலர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியதில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
2021 தேர்தலுக்குப் பிறகு ஹாசனின் கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களில் இளம் முகங்களில் ஒருவரான பிரியாவும் ஒருவர். அவர்கள் அனைவரும் “தனிப்பட்ட காரணங்களை” மேற்கோள் காட்டி MNM இல் இருந்து வெளியேறினர்.
மகேந்திரன் கமல்ஹாசனைத் தாக்கியவர்களில் ஒருவராக இருந்தார், அவர் “சொந்தமாக முடிவெடுப்பார், கட்சியினருடன் கலந்தாலோசிக்கவில்லை, முக்கிய முடிவுகளை வெளியாட்களை எடுக்க அனுமதித்தார் எனக் குற்றஞ்சாட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/