காவிரி பிரச்னை வலுத்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவசரமாக டெல்லி பயணம்!

பரபரப்பான சூழலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, உள்துறை அமைச்சகத்தில் இருந்து, காவிரி பிரச்சனை குறித்து போனில் விபரம் கேட்டுள்ளனர்.

காவிரி பிரச்னை வலுத்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவசரமாக டெல்லி பயணம்! மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி செல்வதாக தகவல்.

தமிழகத்தில் காவிரி பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. நாளை ஆளும் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்நிலையில் வரும் 5ம் தேதி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் 5ம் தேதி முழு வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

நேற்றும் இன்றும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மே 17 இயக்கம் சார்பில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர். பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் போராட்டம் நடந்து வருகின்றாது.

நடிகர் சங்கம் சார்பிலும் விரைவில் போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, உள்துறை அமைச்சகத்தில் இருந்து, காவிரி பிரச்சனை குறித்து போனில் விபரம் கேட்டுள்ளனர். அவரும் விளக்கம் தெரிவித்த நிலையில், அவரை உடனடியாக டெல்லி புறப்பட்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர அவசரமாக மாலை 7.10 மணி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

டெல்லியில் அவர் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் உள்ள நிலவரம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது. தேவைப்பட்டால், பிரதமரையும் சந்திக்கலாம் என தெரிகிறது.

×Close
×Close