ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்
Bomb threats booms in Tamil nadu : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிகழ்வால், போலீசாருக்கு நவம்பர் 28ம் தேதி, சோதனை நாளாகவே அமைந்தது.
Bomb threats booms in Tamil nadu : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிகழ்வால், போலீசாருக்கு நவம்பர் 28ம் தேதி, சோதனை நாளாகவே அமைந்தது.
Tamil Nadu police, Bomb threat in Tamil Nadu, Bomb Threat to DMK office, Bomb threat to Temples, Crime in Tamil Nadu, Tamil Nadu law and order, Bomb Hoax, சென்னை, மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில், திமுக, அண்ணா அறிவாலயம், வெடிகுண்டு மிரட்டல், பாதுகாப்பு, சோதனை, போலீஸ், விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிகழ்வால், போலீசாருக்கு நவம்பர் 28ம் தேதி, சோதனை நாளாகவே அமைந்தது.
Advertisment
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் துவக்க நிகழ்ச்சிகள் என திட்டமிட்ட பணிகளில் தமிழக போலீசார் ஈடுபட்டிருக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்ற தகவல் அடங்கிய இ-மெயில், போலீஸ் தலைமையகத்திற்கு வந்தது. இதனையடுத்து, இரண்டு கோயில்களிலும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Advertisment
Advertisements
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, கொடைக்கானலில், உள்ள ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு போன் செய்த மர்ம நபர், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்னும் சிறிதுநேரத்தில் குண்டு வெடிக்கும் என இந்தியில் பேசி அதிர்ச்சியை அதிகமாக்கினார்.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்திலும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், எந்த இடத்திலும் வெடிகுண்டு மீட்கப்படவில்லை. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு தடுப்பு குழுவினர் நிம்மதியடைந்தனர்.
இ மெயில், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.