திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நோட்டீஸ் விநியோகம் செய்யத போது, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 1ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து விழிப்புஉணர்வு பிரசார நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருச்செந்தூர் சென்ற விவசாயிகள் குழு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.
கோயில் வளாகத்தில் உள்ள பொதுமக்களிடன் நோட்டீஸ் வழங்கும் போது, திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த பா.ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் திடீரென்று உள்ளே நுழைந்தார். அப்போது, அங்கிருந்த பக்தர்களிடம் அய்யாக்கண்ணு ஏமாற்றுக்காரர் என்றும் துண்டுபிரசுரங்களை வாங்காதீர்கள் என்று தடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், நெல்லையம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவின் முகத்தில் கையால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை தாக்க முயன்றனர்.
Advertisment
Advertisements
இதனால் அவர்களுக்கும், நெல்லையம்மாளுக்கும் வாக்குவாதம் முற்றியது.கோபம் அடைந்த அந்த பெண், காலில் இருந்த செருப்பை கழட்டி அய்யாக்கண்ணுவின் முகத்திற்கு நேராக காட்டி சண்டைப்போடுகிறார். உடனே அருகில் இருந்த பக்தர்கள், கோவில் காவலாளிகள் விரைந்து சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் திருச்செந்தூர் கோயில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, அமைதியாக பிரச்சாரம் செய்த தங்களிடம், பாஜக பெண் நிர்வாகி தான் வீணாக சண்டைக்கு வந்தாக கூறினார்.
நன்றி: நியூஸ் 7
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news