Advertisment

தங்கலான் படத்தில் மதத்தை இழிவுபடுத்தும் காட்சி; பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்

தங்கலான் படத்தில் வைணவ மதத்தை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என இயக்குனர் பா. ரஞ்சித் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பொற்கொடி புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vikram Pa ranjith

தங்கலான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் பலரின் மனதைப் புன்படுத்துவதாகவும், அந்த காட்சிகளை  நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடுப்பேன் என்றும் வழக்கறிஞர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம், அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றை பா. ரஞ்சித்துக்கு முன், பா. ரஞ்சித்துக்குப் பின் என்று வரையறை செய்யும் அளவுக்கு அவருடைய வருகைக்குப் பிறகு, இந்தியச சமூகத்தின் முக்கிய பிரச்னையான மிகப் பெரிய கலை ஊடகமான சினிமாவில் சாதி பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தங்கலான் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. 

தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் 19-ம் நூற்றாண்டில், கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்க அழைத்துச் செல்லப்படும் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாய யதார்த்தவாதம் அடிப்படையில் (மேஜிக்கல் ரியலிசம்) சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.

தங்கலான் படத்தின் கதை, இயக்கம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். 

தங்கலான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளார். அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாகக் காட்ட வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தங்கலான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் பலரின் மனதைப் புன்படுத்துவதாகவும், அந்த காட்சிகளை  நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடுப்பேன் என்றும் வழக்கறிஞர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பூஜை புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்திற்கு ஜெர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தங்கலான் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெர்மன் படத்தின் பூஜையின் போது போஸ்டர் இடம்பெற்றது.அ தில், ஒருவர் வானத்தில் போர் விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் குதிப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment