/indian-express-tamil/media/media_files/4xBi5NUijh5TstI2nWxl.jpg)
உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் அனுப்பி 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கடலுார் பெண்ணை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். (representative image)
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்; புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.கடந்த 13ஆம் தேதி, உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
மறு முனையில் பேசிய பெண், எந்த மாதிரியான பெண் வேண்டும் எனவும், அதற்கான பணம் குறித்தும் பேசினார். அடுத்த சில நிமிடத்தில், விக்னேஷ் மொபைல்போனுக்கு சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி, இதில் யார் வேண்டும் என தேர்ந்தெடுக்க கூறினார்.
விக்னேஷ் தனக்கு பிடித்த ஒரு பெண் புகைப்படத்தை தேர்வு செய்து,அந்த பெண் கூறியபடி முன் பணமாக அவரது ஜிபே எண்ணுக்கு ரூ. 5,000 அனுப்பி ஏமாந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் பணம் அனுப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு, வங்கி கணக்கு மூலம் விசாரித்தபோது, கடலுாரைச் சேர்ந்த காயத்ரி, 35; என, தெரியவந்தது.காயத்ரியை கைது செய்த போலீசார் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, கடந்த 6 மாதங்களில் 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 4 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.