Advertisment

அஜித் மீது குற்றம் சுமத்தும் பெண் ஊழியர்; உண்மை என்ன?

woman employer complaint against ajith manager: ஃபர்ஸானாவோ, ''அஜித்தால் பணி நீக்கம் செய்யப்பட்டேன், அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும், உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்'' என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

author-image
WebDesk
New Update
அஜித் மீது குற்றம் சுமத்தும் பெண் ஊழியர்; உண்மை என்ன?

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது அஜித் - ஷாலினி இருவரும் மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்துவரும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதியின்றி வீடியோ எடுப்பது அறத்திற்கு புறம்பான செயல் என்பதால், வீடியோ ஊழியர் ஃபர்ஸானாவை வேலையைவிட்டு நீக்கியது அப்பலோ மருத்துவமனை நிர்வாகம். ஆனால், ஃபர்ஸானாவோ, ''அஜித்தால் பணி நீக்கம் செய்யப்பட்டேன், அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும், உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்'' என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஃபர்ஸானா கொடுத்த பேட்டியில் ஷாலினியிடமும், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடமும் அவர் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளானார்.

இது குறித்து அஜித் தரப்பில், அந்த வீடியோவை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி காட்சிகள் மூலம் வீடியோ எடுத்தது ஃபர்ஸானா என்கிற பெண் ஊழியர் என்பதை உறுதி செய்த பின்னர், அவரை வேலையைவிட்டு அனுப்பியிருக்கிறார்கள். ஆறு மாதமாக மீண்டும் வேலையில் சேர கேட்டும் ஃபர்ஸானாவை நிர்வாகம் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை.

எனவே, ஃபர்ஸானா அஜித்தின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றிருக்கிறார். அங்கு பார்க்க முடியாமல் ஃப்ளையிங் கிளப்பில் அஜித்திடம் பேச முயன்றபோது, அவர் தனது மேனஜரை தொடர்பு கொள்ளச் சொன்னார்.. ஃபர்ஸானா சுரேஷ் சந்திராவிடம் நடந்ததை சொன்னதும், மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றிருக்கிறார்.

பிறகு, ஃபர்ஸானா ஃபெப்சி அமைப்பில் தெரிந்தவர்கள் மூலம் முயன்றிருக்கிறார். பெப்சியிலிருந்து சுரேஷ் சந்திராவுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் பற்றி அஜித்திடம் சொன்னபோது, 'அவங்களோட பிரச்சனையை சரி செய்ய சொல்லியிருக்கிறார்.  ஃபர்ஸானா  தனக்கு நிறைய பிரச்சனைகள் இருப்பதாக சுரேஷ் சந்திராவிடம் சொல்லியிருக்கிறார். குழந்தைகள் படிப்பு செலவுக்கு கஷ்டப்படுவதாக கூறியதால் அஜித் பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார். குழந்தையுடைய பள்ளி முகவரியை கேட்டதற்கு, ஃபர்ஸானாவோ தன்னுடைய கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லிருக்கிறார்.

பணத்தை நேரடியாக ஃபர்ஸானா கணக்கிற்கு அனுப்ப மறுத்ததால், 'அஜித்தின் மேலாளர் உதவி செய்கிறேன் எனக்கூறிவிட்டு செய்யவில்லை' என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஃபர்ஸானா. போலீஸார் விசாரணையில், சுரேஷ் சந்திரா நடந்தவற்றை விளக்கியுள்ளார். இதெல்லாம் அஜித் சாரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க இவ்வாறு செய்கிறார்கள்" என்றார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thala Ajith Apollo Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment